நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர புதிய யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

ஒரு வீதியில் பயணிக்கும் வாகனத்தில் குறைந்தது மூன்று பேராவது பயணிக்க வேண்டும் என தாம் முன்மொழிவதாக அமைச்சர் கூறுகிறார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கையில் வீதியில் வாகனம் நிறுத்தப்பட்டால், அந்த வாகனத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். ஏனெனில் ஒரு வாகனத்தில் ஒருவர் ஏறும் நிலை உள்ளது. இதனால் அதிகளவு எரிபொருள் எரிகிறது. இந்த நேரத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது பற்றி யோசிக்காமல் வீதியில் இருக்கும் வாகனங்களைப் பயன்படுத்த முன், ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்” என  அமைச்சர் மேலும் கூறினார்.