டிக்டொக் செயலி மீதான தடைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, டிக்டொக் தடைக்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதனையடுத்து செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் அமெரிக்காவில் டிக்டொக் செயலி தடை செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.