இன்று காலை மத்திய Hawke's Bay இல் கால்நடைகளை ஏற்றிச் சென்ற டிரக் கவிழ்ந்ததில் கால்நடைகள் இறந்துள்ளன.

இந்த விபத்து காலை 8.50 மணியளவில் Elsthorpe சாலையில் இடம்பெற்றுள்ளது. சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சில கால்நடைகள் உயிரிழந்ததுடன், சில கால்நடைகள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உதவிக்காக கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அருகில் இருந்த விவசாயிகளும் உதவி செய்தனர்.

சாலையில் எண்ணெய் கசிந்ததால், உள்ளூர் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை அனுப்பினர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, அனைத்து கால்நடைகளும் லாரியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

செய்தி நிருபர் - புகழ்