இலங்கையில் குறுகிய காலப்பகுதியில் மீண்டும் எரிவாயு விலையை அதிகரிக்க நேரிடும் என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அண்மைக் காலத்தில் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், எதிர்வரும் குளிர்காலம் மற்றும் கொரோனா நோய் தொற்றுக் காரணமாக  மேலும் விலை அதிகரிக்கலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்க வேண்டிய அவசியமில்லை என்றும் எரிவாயு விலையை நிலையான விலைக்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பொருளாதாரத்தின் நிலை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படக் கூடாது.

இவ்வாறு மறைக்கப்படுவதால், இலங்கையில் எழும் பொருளாதாரப் பிரச்சினைகளில் பொதுமக்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
எனவே, இந்த நாட்டின் படித்த மற்றும் அறிவார்ந்த மக்கள் இந்த நேரத்தில் இந்தப் பொருளாதார நிலையை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.