பண்டிகை காலத்தில் மேல்மாகாணம் முற்றாக முடக்கப்படாது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.எனினும் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றவரையில் நோயாளிகள் அடையாளம் காணப்படும்பகுதிகள் முடக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 


பொதுமக்களை பதட்டமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள இராணுவதளபதி சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நிலைமை கட்டுப்பாட்டை மீறவில்லை,எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.நோயாளர்கள் காணப்படும் பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டால் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை அடையாளம் கண்டால் நோய் மேலும் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதிகளை உடனடியாக தனிமைப்படுத்துவோம் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

 


பண்டிகை காலம் நெருங்குவதால் தற்போதைய நிலைமை குறித்து ஆராயவுள்ளோம், என தெரிவித்துள்ள இராணுவதளபதி பொதுமக்கள் பெருமளவில் தேவையற்ற விதத்தில் காணப்படுவதை தடுப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் எடுப்பதா என ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் மேல்மாகாணம் முற்றாக முடக்கப்படாது நோயாளர்கள் காணப்படும் பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.