இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் இணையவழியில் நடத்துமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இதுவரையில் நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாகவும், எதிர்காலத்தில் சுங்கத் திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அதற்கேற்ப ஆன்லைனில் நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு உரிய வருமானம் கிடைக்கும் எனவும், தங்கம் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான திறந்த உரிமையை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.