அமெரிக்காவைச் சேர்ந்த டோட்-பாட்ரிசியா கெரெக்ஸ் என்ற வயதான தம்பதியினர் நியூசிலாந்துக்கு விடுமுறைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனிடையே அவர்கள் வருகை தந்த 6 வாரங்களுக்குள் மனைவி பாட்ரிசியாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அவர்களை உடனடியாக அமெரிக்கா திரும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்காக டோட் ஏர் நியூசிலாந்து விமான நிர்வாகத்தை தொடர்புக் கொண்டு தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் இதன் காரணமாக அமெரிக்கா திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏர் நியூசிலாந்து நிர்வாகம் அவரிடமிருந்து ரூ.65 லட்சத்தை டிக்கெட் கட்டணமாக பெற்றுள்ளது. இது சாதாரண கட்டணத்தை விட 4 மடங்கு அதிகம் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்நிறுவனம் அத்தம்பதியினரிடம் மன்னிப்பு கேட்டு பணத்தை திருப்பியளிப்பதாக கூறியுள்ளது.