Hastings இல் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 8.50 மணியளவில் Maraekakaho சாலை, Longlands சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை 2 சந்திக்கும் ரவுண்டானாவில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது.

விபத்தை தொடர்ந்து சாலை தடை செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தீவிர விபத்து பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்