வெலிங்டனுக்கு வடக்கே Kāpiti இல் உள்ள Waikanae ஆற்றின் ஓரத்தில் அதிக அளவு நச்சுப் பாசிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நச்சு பாசிகள் அல்லது சயனோபாக்டீரியா, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அதை நாய்கள் உட்கொண்டால் உயிருக்கே ஆபத்தானது.

Greater Wellington செய்தித் தொடர்பாளர் பென்னி ஃபேர்பிரதர் கூறுகையில், தண்ணீரில் விளையாடுவதை விரும்பும் செல்லப்பிராணிகளுக்கு இந்த நச்சு பாசிகள் தீங்கு விளைவிக்கும் திறன் உள்ளவை.

நச்சு பாசி என்பது ஒரு நியூரோடாக்சின் ஆகும், இது பாம்பு விஷத்தைப் போல செயல்படுகிறது. அதன் சிறிய அளவு கூட ஒரு நாயைக் கொல்ல போதுமானது என தெரிவித்தார்.

இதனிடையே நச்சு பாசிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருத்துவரை அணுகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்