Christchurch இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Shirley புறநகர்ப் பகுதியில் New Brighton சாலையில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் நேற்றைய தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க ஒரு தீயணைப்பு ஆய்வாளர் வளாகத்தில் இருப்பார் என கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்