முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

 

நேற்று (23) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உலகிலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

அதன்படி , கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

 

இத்துடன், இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்தும் மற்றும் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் ஆகியவைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.