மேற்கு ஆக்லாந்தின் Lynnmall பகுதியில் துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் ஒரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய்கிழமை காலை 10.40 மணியளவில் குறித்த வணிக வளாகத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த நபரைக் கண்டுபிடித்து, எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரிடம் இருந்து ஒரு பொம்மை துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தீர்க்கப்பட்டதில் பொலிஸார் திருப்தி அடைந்துள்ளனர், மேலும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்