ஒவ்வொரு கோடையிலும் நியூசிலாந்து முழுவதும் இடம்பெறும் பல Rodeo நிகழ்வுகளில் விலங்குகளின் இறப்பு மற்றும் விலங்குகள் காயமடைந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நியூசிலாந்து விலங்கு நல அமைப்பான SAFE இன் அறிக்கைப்படி, இம்முறை இடம்பெற்ற ரோடியோ நிகழ்வுகளில் மூன்று நாட்களில் மூன்று விலங்குகள் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 28 அன்று Ōpōtiki அரங்கில் இடம்பெற்ற Rodeo நிகழ்வில் ஒரு காளை கால் முறிந்து இறந்தது.

டிசம்பர் 30 ஆம் திகதி Te Anau இல் இடம்பெற்ற நிகழ்வில் ஒரு காளை முதுகுத்தண்டில் காயம் அடைந்து இறந்தது. மற்றும் Rerewhakaaitu அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் குதிரை ஒன்று இறந்து.

SAFE தலைமை நிர்வாக அதிகாரி டெப்ரா ஆஷ்டன் கூறுகையில்..

சனிக்கிழமையன்று ஒரு குதிரையும் அரங்குக்குள் செல்லும் போது அதன் காலில் பெரும் காயம் ஏற்பட்டதாக கூறினார்.

New Zealand Rodeo Cowboys Association தலைவர் லயால் காக்ஸ் இந்த விலங்குகளின் மரணங்கள் மற்றும் காயங்கள் நடந்ததை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் இச் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.