தெற்கு ஆக்லாந்தில் உள்ள Pukekohe என்ற இடத்தில் டிரக் மற்றும் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் 12.30 மணியளவில், Morgan சாலை சந்திப்பிற்கு அருகில் உள்ள Pukekohe East சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Pukekohe East வீதி மூடப்பட்டுள்ளதாகவும், மாற்றுப்பாதைகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.