Dunedin புறநகர் பகுதியான Wakari இல் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கை கொலை வழக்காக பொலிஸார் கருதுகின்றனர்.

Helensburgh வீதி, Wakari என்ற முகவரியில் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு அதிகாலை 3 மணிக்கு முன்னதாக அவசர சேவைகள் அழைக்கப்பட்டது.

அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.