ஆக்லாந்தின் தெற்கே இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Hunua என்ற இடத்தில் உள்ள Hunua வீதியில் காலை 10.40 மணியளவில் இந்த விபத்து பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.