World Buskers திருவிழாவின் 30வது ஆண்டு விழா கிறிஸ்ட்சர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச அளவில் Buskers (பண நன்கொடைக்காக தெருவில் இசை அல்லது பிற பொழுதுபோக்குகளை நிகழ்த்தும் நபர்/ வித்தைக்காரர்) கிறிஸ்ட்சர்ச் வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச்சின் தெருக்களுக்கு மக்களை ஈர்க்க கலைஞர்கள் தயாராக உள்ளனர்.

இந்த விழாவில் பல்வேறு வகையான வித்தைகள் இடம்பெறவுள்ளன.

இன்று மதல் 29 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்ட்சர்ச் மேயர் Phil Mauger, இந்த திருவிழா, நகரின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறினார்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட கிறிஸ்ட்சர்ச்சின் இந்த விழாவை மீண்டும் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைவதாக Bread & Circus World Buskers Festival இயக்குனர் ஸ்காட் மைட்மென்ட தெரிவித்தார்.

இது நகரம் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான பாரம்பரியம், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற அற்புதமான திருவிழாவை நாங்கள் தெருக்களில் கொண்டாடுகிறோம்.

சர்வதேச கலைஞர்கள் கிறிஸ்ட்சர்ச் வருவதால் இந்த ஆண்டு இன்னும் உற்சாகமாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.