டிசம்பர் 30 அன்று நெல்சனில் நடந்த ஒரு தீவிரமான சம்பவத்துடன் தொடர்புடைய Teina Jareau Haddon என்ற நபரை கண்டுபிடிக்க பொலிசார் பொதுமக்களின் உதவியை எதிர்பார்க்கின்றனர்.

33 வயதான ஹாடன், ஒரு பெரிய, திடமான உடலமைப்பு மற்றும் தனித்துவமான முக பச்சை குத்தப்பட்டவர் என்று விவரிக்கப்படுகிறார்.

பிளாக் பவர் கும்பல் உறுப்பினரான ஹாடனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் ஆபத்தானவராகக் கருதப்படுகிறார் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் லெக்ஸ் புரூனிங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"நெல்சன்/டாஸ்மேன் பிராந்தியத்தின் Victory Square மற்றும் Appleby பகுதிகளில் அவரது கூட்டாளிகள் மற்றும் பல தொடர்புகள் உள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் அவர் அந்த பகுதியில் நடமாடக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்." என அவர் தெரிவித்தார்.

மேலும் ஹாடனை யாரும் அணுகக்கூடாது என புரூனிங் எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான எங்கள் விசாரணைக்கு டீனா உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், நாங்கள் அவரைக் கண்டுபிடிப்பது முக்கியம் எனவே ஹாடனைப் பார்க்கும் எவரும் உடனடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை கேட்டுக் கொள்கிறது என அவர் தெரிவித்தார்.