அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளில் இருந்து விழுந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்து வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோபைன் டெல்வோயர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது அப்பகுதியில் அவர் தனது மனைவி உள்ளிட்டவர்களுடன் சைக்கிளிங் சென்றார்.

அதிபர் சைக்கிளிங் செல்கிறார் என்றதும் அவரை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூடியிருந்தனர். இதனைக் கண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்கு நின்று கொண்டிருந்த மக்களை பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்திய போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனினும் உடனடியாக எழுந்த ஜோ பைடன் தான் நலமாக இருப்பதாக கூறினார்.

இதனிடையே பைடன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உடல் நிலை குறித்து வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்த வித மருத்துவ சிகிச்சையும் தர தேவையில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (79), உடல் நிலை குறித்து உலகம் முழுவதும் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் அவருக்கு உள்ள நிலையில், இதனை சுட்டிக்காட்டி அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். ஆனால், உலக வல்லரசான அமெரிக்க அதிபரால் அவ்வாறு இருந்து விட முடியாது என்பதால், ஜோ பைடன் அதற்கு தகுதியானவரா என்ற விமர்சனங்களும் அவருக்கு எதிரானவர்களால் முன் வைக்கப்படுகின்றன.