சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'எஸ்கே 20' படத்தில் நடித்த வருகிறார். 

மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எற்கனவே வெளியான நிலையில் தற்போது படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி தமிழில் 'மாரி 2' என்.ஜி.கே ஆகிய படங்களில்  கதாநாயகியாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.