சினிமாவில் கார்கள் பறப்பது, விபத்து நடப்பது எல்லாம் சர்வ சாதாரணமாக நடப்பது போல காட்டுகின்றனர். ஆனால், அதற்கு பின்னால் ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்களின் கடினமான உழைப்பு உள்ளது. கார், பைக் ஓட்டுவதில் கில்லாடியான அஜித் குமார் ஹை ரிஸ்க் எடுத்து விடாமுயற்சி படத்துக்காக செய்திருக்கும் ஸ்டண்ட் காட்சி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ் நடிகர் அஜித் குமார் அருகே அந்த காரில் அவரும் டூப் ஏதும் பயன்படுத்தாமல் நடித்துள்ளார். இத்தனைக்கும் அவரது கைகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில், உண்மையாகவே கார் அந்தர் பல்டி அடித்து விபத்துக்குள்ளாகும் காட்சியில் அவரை நடிக்க வைத்து அஜித் குமார் மாஸ் காட்டியிருக்கிறார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தில் பைக் ஓட்டும் காட்சியில் நடிகர் அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்ட காட்சிகளையும் படம் வெளியாகும் முன்னரே வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித் எடுத்த ஹை ரிஸ்க் காட்சியை வெளியிட்டுள்ளனர்.

சுரேஷ் சந்திரா வெளியிட்ட விடாமுயற்சி படத்தின் விபத்து வீடியோவை 15 நிமிடத்தில் 2.3 மில்லியன் ரசிகர்கள் பார்த்து விட்டனர். கண்டிப்பாக 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளை கடந்து இந்த வீடியோ டிரெண்டாகி விடும் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.