மெக்ஸிகோவில் உள்ள சாண்டா மரியா ஜகாடெபெக்கில் திடீரென பூமி உள்வாங்கி மாபெரும் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. முதலில் சிறிய பள்ளமாகக் காட்சியளித்த இந்த சிங்க்ஹோல் நாளுக்கு நாள் இன்னும் பெரியதாகி வளர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ந்து வரும் திடீர் பள்ளம் அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எதனால் இந்த பள்ளம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான விடையை தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.