சீனா தனக்கென பிரத்யேக விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது.

'தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்துக்கான எரிபொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ‘தியான்சோ - 2’  என்ற சரக்கு விண்கலத்தை சீனா விண்ணுக்கு அனுப்பியது. 

இந்தநிலையில் குறித்த விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அடுத்த மாதம் அனுப்ப உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 

‘சென்ஷு 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் ஏவுதளத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள்  விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் இவர்கள் 3 மாத காலத்துக்கு அங்கு தங்கி இருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளர் யாங் லிவி தெரிவித்தார்.