ஆக்லாந்திற்கு வடக்கே Matakana என்ற இடத்தில உள்ள Ti Point Reptile Park இல் இருந்து ஒரு ஆமையும் ஓணானும் திருடப்பட்டதையடுத்து பொலிசார் பொதுமக்களிடம் தகவல்களை கோருகின்றனர்.

காணாமல் போன ஆமை 17 வயது ஆண் என்றும் ஓணான் 8 வயது பெண் என்றும் சார்ஜென்ட் டான் மெக்டெர்மொட் தெரிவித்தார். இந்தச் சம்பவம் 2024 மார்ச் 19 செவ்வாய்க்கிழமைக்கும் 20 புதன் கிழமைக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

திருடப்பட்ட விலங்குகளின் நலன் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், காவல்துறை தற்போது பொதுமக்களிடம் உதவி கோருவதாக அவர் கூறினார்.

Ti Point Repitle Park மேலாளர் மைக் சில்லிங்வொர்த் அவர்கள் விலங்குகளின் நலனுக்காக கவலைப்படுவதாகவும், அவை பாதுகாப்பாக திரும்புவதைப் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்