மேற்கு ஆக்லாந்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல் ஏற்பட்டதாக வந்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலை 10 மணிக்கு முன்னதாக Simpson சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர் மற்றும் ஒரு நபருடன் அவர்கள்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. பின்னர் அந்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்தார், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே Candia சாலைக்கும் Babich சாலைக்கும் இடையே உள்ள Simpson சாலை மூடப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்