Dunedin இல் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை North East Valley இல் இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இந்த தீ விபத்தில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்று விசாரணை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்