Hastings மற்றும் Tauranga வில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இரண்டு வீடுகள், 80,000 டொலர்கள் ரொக்கம், பல வாகனங்கள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகிய சட்டவிரோத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மைக் பிஷ்ஷர் கூறுகையில், இந்த அதிரடி நடவடிக்கையில், ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மற்றும் மஸ்டா பிடி-50 ஆகிய 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் இந்த நடவடிக்கையின் போது Hastings இல் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெள்ளிக்கிழமை Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பிஷ்ஷர் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்