ஆக்லாந்து பிராந்திய எரிபொருள் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் தற்போதைய கூட்டணி ஆட்சியின் 100 நாள் வேலை திட்டத்தில் ஆக்லாந்தின் பிராந்திய எரிபொருள் வரியை நீக்குவதும் ஒரு பகுதியாகும்.

இதற்கான சட்டம் நேற்று இரவு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ஆக்லாந்து பிராந்திய எரிபொருள் வரி ரத்து செய்யப்பட்டது குறித்து பெருமிதம் கொள்வதாக போக்குவரத்து அமைச்சர் சிமியோன் பிரவுன் கூறினார்.

கூட்டணி அரசாங்கம் ஆக்லாந்து மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், நெரிசலைக் குறைத்தல், உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை உந்துதல் ஆகியவற்றில் முதலீட்டை மையப்படுத்துதல் என அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்