West Coast இல் பேருந்து ஒன்றில் தீப்பிடித்ததில் உயிரிழந்தவர் சீன சுற்றுலாப் பெண் என சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

பெப்ரவரி 20 அதிகாலை Westland இல் உள்ள Blue Spur இல் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அந்தப் பெண் உயிரிழந்தார்.

அந்த பெண் தனது கணவருடன் South Island இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அவரது கணவர் மட்டும் தீயில் இருந்து காயமின்றி தப்பியதாகவும் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள சீனத் தூதரகம் அவரது துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு தூதரகம் உதவி செய்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்