நூற்றுக்கணக்கான ஸ்னாப்பர் மீன்கள் ஆக்லாந்து கடற்கரைகளில் இறந்து மிதக்கின்றன.

Hauraki Gulf இல் உள்ள கடற்கரைகளில் இவ்வாறு மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மீன்களை சாப்பிட வேண்டாம் என்று மீன்வளத்துறை நியூசிலாந்து பொதுமக்களை எச்சரித்துள்ளது.

உள்ளூர் மீனவர்கள் பெப்ரவரி 23 அன்று இந்த இறந்த மீன்களைக் கண்டுபிடித்து முதன்மை தொழில்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்தனர்.

 மீன்வளத்துறை நியூசிலாந்தின் செயல் இயக்குனர், ஆண்ட்ரே எஸ்பினோசா, மீன்கள் இறப்பு குறித்து புகாரளிக்கவும், மீன் சாப்பிட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீன்களின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், இறந்த மீன்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எஸ்பினோசா கூறினார்.

*இந்த தகவல் முதலில் Stuff மூலம் வெளியிடப்பட்டது.