Hawke's Bay இல் உள்ள Flaxmere இல் ஒரு வீட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் குறித்த வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்