Kaitaia வில் காணாமல் போயுள்ள 17 வயது இளைஞன் குரூஸின் நலனில் காவல்துறையும் அவரது குடும்பத்தினரும் அக்கறை கொண்டுள்ளனர்.

குரூஸ் கடைசியாக பெப்ரவரி 13 அன்று மாலை 4.30 மணியளவில் Palmerston North இல் உள்ள Hokowhitu என்ற இடத்தில் காணப்பட்டார்.

அவர் 170 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் என்றும், அவர் காணாமல் போன நேரத்தில், புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் ஃப்ளோரோ ஆரஞ்சு மற்றும் கருப்பு ஹூடி அணிந்திருந்தார்.

குரூஸின் குடும்பத்தினர் அவரைப் பற்றி கவலைப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் இருக்கும் இடம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்