Breaking News

வெலிங்டன் கரன்சி பரிமாற்ற நிலையத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது...!!

வெலிங்டன் கரன்சி பரிமாற்ற நிலையத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது...!!

இன்று காலை வெலிங்டன் கரன்சி பரிமாற்ற நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டதை அடுத்து குறித்த நிலையம் மூடப்பட்டது.

ஆயுதமேந்திய பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்தனர்.

காலை 9 மணிக்கு No1 Currency என்ற குறித்த நிலையம் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து 8 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஒரு அறிக்கையில், ஒரு நபர் ஊழியர்களிடம் கைத்துப்பாக்கியைக் காட்டி, வெளியிடப்படாத வெளிநாட்டு நாணயத்தைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 43 வயதான குறித்த குற்றவாளியை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதுடன் மோசமான கொள்ளை மற்றும் போலி துப்பாக்கியை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.