வெலிங்டனின் துறைமுகத்தில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில், Point Howard மற்றும்  Eastbourne இன் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையில், Māhina Bay இல் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இன்று மதியம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அவர் யார், எப்படி உயிரிழந்தார் என தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு அறிக்கையில், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஹேலி ரியான், அந்தப் பெண் 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர் என்று நம்பப்படுகிறது, மேலும் அவர் இறந்து கிடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு York Bay பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் என தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை York Bay பகுதியில் இருந்தவர்களிடம் இருந்தும், விசாரணைக்கு உதவக்கூடிய தகவலை கொண்டவர்களிடம் பேச கேட்க விரும்புவதாக ரியான் கூறினார்.

அந்தப் பெண் 60-70 வயதுடைய NZ ஐ சேர்ந்த ஐரோப்பியர் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல் துறையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்