முன்னாள் ஆக்லாந்து கவுன்சில் கட்டிட ஆய்வாளர் மற்றும் ஒரு நிறுவன இயக்குநர் ஆகியோர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

தீவிர மோசடி அலுவலகம் (SFO) கட்டிட ஆய்வாளர் நிக்கோலஸ் பிரைட்டுக்கு எதிராக 21 ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது, அவர் 2018 மற்றும் 2020 க்கு இடையில் கட்டிட ஆய்வாளராக இருந்தபோது பண லஞ்சம் மற்றும் பிற சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஆக்லாந்து கட்டிட நிறுவன இயக்குனர் ஊழல் மற்றும் லஞ்சம் போன்ற 23 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நேற்று மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கு நிறுவன இயக்குனர், தான் குற்றமற்றவர் என தெரிவித்தார்.

இதனிடையே கட்டிட ஆய்வாளர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராவார் என கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்