ஆக்லாந்தின் Hillcrest புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

நண்பகலுக்குப் பிறகு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மேல் மாடியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருகை தந்தனர்.

மேலும் ஆறு குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் தீக்காயங்களுடன் ஐந்து பேர் North Shore மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றதாகவும் செயின்ட் ஜான் கூறினார்.

தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

செய்தி நிருபர் - புகழ்