Breaking News

Coral கடலில் உருவாகும் புயல் - North Island ஐ தாக்கும் அபாயம்...!!

Coral கடலில் உருவாகும் புயல் - North Island ஐ தாக்கும் அபாயம்...!!

Coral கடலில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டலக் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த சில நாட்களில் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாக MetService எச்சரித்துள்ளது.

வெப்பமண்டல சூறாவளி நியூ கலிடோனியாவின் தெற்கே நகர்ந்து அடுத்த வார இறுதியில் நியூசிலாந்தின் வடக்கே நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக MetService தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி North Island இற்கு அருகில் சென்றால் சமீபத்திய கடுமையான வானிலையிலிருந்து மீண்டு வரும் பகுதிகளை மேலும் பாதிக்கும் என MetService இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் MetService வெப்பமண்டல தாழ்வை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் மேலும் தகவல்கள் கிடைக்கும்போது புதுப்பிப்புகளை வழங்கும் என்றும் கூறியுள்ளது.