இன்று பிற்பகல் North Island இன் மேல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆக்லாந்து, Waitakere, Franklin, Rodney, Kaipara, Far North மற்றும் Whangārei  ஆகிய இடங்களுக்கு பிற்பகல் 3 மணிக்குப் பிறகு கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகளை MetService வெளியிட்டது.

கனமழையால் ஓடைகள், பள்ளங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் மற்றும் வாகனம் ஓட்டும் நிலைமை மிகவும் அபாயகரமானதாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Northland, ஆக்லாந்து, வைகாடோ, Waitomo, Taumarunui, Bay of Plenty, Rotorua மற்றும் Taupō ஆகிய இடங்களில் இன்று இரவு 9 மணி வரை கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை உள்ளது.

மழைவீழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு 25 மில்லிமீட்டரைத் தாண்டும், இதனால் திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று MetService வானிலை ஆய்வாளர் Dan Corrigan கூறினார்.