நேற்றிரவு Ōtaki அருகே இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்தனர்.

ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அதே வாகனத்தில் இருந்த இரண்டு பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

மற்ற வாகனத்தில் இருந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விபத்து பிரிவு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்