இன்று பிற்பகல் Hauraki மாவட்டத்தில் ஒரு சூறாவளி தாக்கியதை அடுத்து மின்கம்பிகள் சேதமடைந்தன
மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் வீட்டின் கூரைகளையும் தூக்கி எறிந்தது.

மதியம் 2 மணிக்கு முன்பு Paeroa வில் ஒரு வீட்டின் கூரை சூறாவளியால் தூக்கி வீசப்பட்டதை அடுத்து தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

மின்கம்பிகள் மற்றும் மரங்கள் சாய்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Hauraki மாவட்ட கவுன்சில் தனது முகநூல் பக்கத்தில்...

Paeroa வில் இருந்து Waihi வரையிலான Karangahake Gorge  மரம் விழுந்ததால் சாலை தடைப்பட்டது.

மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனமான Powerco ஒரு அறிக்கையில் ‍Ngatea, Kerepehi மற்றும் Paeroa பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்தது.

"மின்சார வலையமைப்பின் சேதத்தை மதிப்பிடுவதற்கும் சரிசெய்வதற்கும் எங்களிடம் குழுக்கள் உள்ளன.

"பாதுகாப்பாக இருக்க, கீழே விழுந்த அல்லது தாழ்வான மின்கம்பிகளைக் கண்டால், பவர்கோவின் எமர்ஜென்சி எண் 0800 27 27 27க்கு அழைக்கவும்." என கூறப்பட்டுள்ளது.