நாளை இடம்பெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரக்பி லீக் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக உற்சாகத்தை உருவாக்கும் விதமாக ஆயிரக்கணக்கான Toa Samoa (சமோவா நாட்டின் தேசிய ரக்பி லீக் அணி) ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்காக ஆக்லாந்தின் Māngere மற்றும் Ōtara வில் ஒன்று கூடினர்.

கடந்த வார இறுதியில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடி Toa Samoa அணி அசத்தலாக வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தெரிவானது.

இந்நிலையில் இந்த வெற்றியை Toa Samoa ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கணிசமான நெரிசல் ஏற்படுவதால், காவல்துறையினரின் போக்குவரத்து எச்சரிக்கையை இது தூண்டியுள்ளது.

மேற்கு ஆக்லாந்தில் உள்ள Westgate Shopping Centre மற்றும் Parrs Park மற்றும் தெற்கு ஆக்லாந்தில் உள்ள Ōtāhuhu நகர மையம், Māngere நகர மையம் மற்றும் Ōtara நகர மையம் ஆகியவற்றைச் சுற்றி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவையின்றி மக்கள் அந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.