தெற்கு ஆக்லாந்தில் இன்று காலை இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

ஒரு அறிக்கையில், காலை 6.30 மணியளவில் Waiuku என்ற இடத்திற்கு அருகே Hall வீதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் தீவிர விபத்து பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மிடில்மோர் மருத்துவமனைக்கு ஆக்லாந்து மீட்பு ஹெலிகாப்டர் மூலம்
கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.