நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 20,522 கொவிட் தொற்றுகள் சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அக்டோபர் 24 திங்கள் முதல் அக்டோபர் 30 ஞாயிறு வரை பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த 18 பேரில் இருவர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்டவர், இருவர் 60 வயதுடையவர்கள், ஒருவர் 70 வயதுடையவர், 6 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆறு பேர் 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

மேலும் உயிரிழந்தவர்களில் 07 பேர் ஆண்கள் மற்றும் 11 பேர் பெண்கள் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நேற்று நள்ளிரவு நிலவரப்படி தீவிர சிகிச்சை பிரிவில் 08 பேர் உட்பட 323 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.