ஆக்லாந்து போக்குவரத்து, தற்போதைய ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக பிராந்தியம் முழுவதும் அதன் தினசரி கால அட்டவணையில் இருந்து 800க்கும் மேற்பட்ட பேருந்து பயணங்களை நீக்க உள்ளது‌.

எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த பேருந்து பயணங்கள் கால அட்டவணையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மெட்ரோ பேருந்து சேவைகளின் குழு மேலாளர் டேரேக் கோபர் தெரிவிக்கையில் 500 ஓட்டுநர்கள் குறைவாக இருப்பதாக கூறினார்.

ஓட்டுநர் பற்றாக்குறையின் விளைவுகளால் இந்த ஆண்டு எங்கள் பேருந்து கால அட்டவணையை முழுமையாக
இயக்க நாங்கள் சிரமப்பட்டோம் என்று கோபர் கூறினார்.

இந்நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்ட பயணங்கள் மொத்த பயணங்களில் 6 சதவீதம் ஆகும் என அவர் தெரிவித்தார்.

ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக மெட்லிங்க் 67 பேருந்து சேவைகளை ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.