நியூசிலாந்தில் கடந்த வாரத்தில் 9809 கொவிட்-19 தொற்றுகள் சமூகத்தில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவர் 10 வயதுக்கு குறைவான ஒரு குழந்தை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் ‌மொத்த எண்ணிக்கை 2030 ஆகும்.

இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் எட்டு பேர் உட்பட 166 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டின் எல்லையில் ஐந்து கொவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.