இன்று காலை Invercargill பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Otatara வில் உள்ள  Marama Avenue தெற்கில் காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தின் போது அப்பகுதியில் பயணித்தவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.