முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மேலும் ஒரு மைக்கேல் ஹில் நகைக்கடையில் கொள்ளையடித்தை அடுத்து பரபரப்பான ஹமில்டன் மாலில் உள்ள கடைகள் பூட்டப்பட்டன.

இன்று காலை 11.30 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கருப்பு உடை அணிந்து வந்து கண்ணாடியை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் செயல் ஆய்வாளர் மைக்கேல் ஹென்வுட் கூறுகையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

சிசிடிவி காட்சிகளைப் பார்ப்பது உட்பட, சேதம் மற்றும் என்னென்ன கொள்ளையிடப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த பொலிஸார் வலுவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

குற்றவாளிகளை அடையாளம் காண எங்கள் ‌ஊழியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

எங்கள் சமூகத்தில் தீங்கு விளைவிக்கும் இந்த வகையான குற்றத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என‌ அவர் மேலும் தெரிவித்தார்.

Pukekohe, Takapuna மற்றும் Queen Street ஆகிய இடங்களில் உள்ள Michael Hill நகைக் கடைகளும் சமீபத்திய மாதங்களில் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.