Hawke's Bay இல் இடம்பெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்களை அடுத்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் நள்ளிரவு 1 மணிக்கு முன்பு Napier, Emerson தெருவில் உள்ள ஒரு கடையில் திருட்டு வாகனத்தை பயன்படுத்தி பொருட்கள் கொள்ளையிடப்பட்டன.

சிறிது நேரத்தில் அதே தெருவில் உள்ள மற்றொரு கடையை உடைத்து திருடர்கள் பொருட்களை எடுத்து சென்றனர்.

பின்னர், Hastings இல் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இருந்து வாகனம் ஒன்று புறப்பட்டுச் சென்றது பற்றிய புகாரைப் பெற்ற பொலிசார் அதை பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில் அதிகாரிகள் மீது வாகனத்தில் இருந்து பொருட்கள் வீசப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மூன்று இளைஞர்களும் 19 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.