வடக்கு Taranaki பகுதியான Urenui அருகே மாநில நெடுஞ்சாலை 3 இன் Mokau‌ சாலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கார் ஒன்று சிக்கிக்கொண்டது.

தீயணைப்பு மற்றும் அவசரகால செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேற்றைய தினம் இரவு 11 மணியளவில் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

மண் மற்றும் குப்பைகளால் சூழப்பட்ட காரில் இருந்த நான்கு பேரை மீட்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் போது மூடப்பட்ட Mokau சாலையின் ஒரு பாதை தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

ரெக்ஸ் வேட் என்ற நபர் தனது இரண்டு மகள்களையும் மைத்துனரையும் அழைத்துக் கொண்டு இரவு 10.30 மணியளவில் கொட்டும் மழையில் நியூ பிளைமவுத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனமழை காரணமாக அவர்கள் மெதுவாக பயணித்தது அதிர்ஷ்டம்.‌ இல்லையெனில் தாக்கம் மிகவும் மோசமாக இருந்திருக்கும் என்று செய்தி தொடர்பாளர் கூறினார்.

ரெக்ஸ் வேட்டின் வாகனத்தில் சக்கர விளிம்புகள் வரை மண்ணில் புதைக்கப்பட்டது.

நெடுஞ்சாலையின் இரு பாதைகளையும் உள்ளடக்கிய இந்த நிலச்சரிவில் காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று வேட் கூறினார்.

இதனிடையே குறித்த நிலச்சரிவில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.