கடந்த மாதம் 11 ஆம் திகதி அன்று தெற்கு ஆக்லாந்தில் உள்ள Manurewa வில் சூட்கேஸ்களில் எச்சங்களாக கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு இளம் குழந்தைகளைக் கொன்றதற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரியாவில் 42 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை பொலிசார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

Counties Manukau CIB துப்பறியும் இன்ஸ்பெக்டர் Tofilau Fa' amanuia Vaaelua, தென் கொரிய அதிகாரிகள் அந்த பெண்ணை கைது வாரண்டின் கீழ் இன்று கொலைக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததாக கூறினார்.

நியூசிலாந்துக்கும் கொரியா குடியரசுக்கும் இடையிலான ஒப்படைப்பு உடன்படிக்கையின் கீழ் நியூசிலாந்து காவல்துறையின் கோரிக்கையின் விளைவாக கொரிய நீதிமன்றங்களால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக அவரை மீண்டும் நியூசிலாந்திற்கு நாடு கடத்துமாறு NZ பொலிசார் விண்ணப்பித்ததாகவும், ஒப்படைக்கும் செயல்முறை முடிவடையும் வரை காவலில் வைக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இவ்வளவு குறுகிய காலத்திற்குள் வெளிநாட்டில் ஒருவரை கைது செய்ததற்கு கொரிய அதிகாரிகளின் உதவி மற்றும் எங்கள் NZ போலீஸ் இன்டர்போல் ஊழியர்களின் ஒருங்கிணைப்பே காரணம் என்று அவர் கூறினார்.

நியூசிலாந்து மற்றும் வெளிநாட்டில் பல விசாரணைகள் முடிக்கப்பட உள்ளன, என்று அவர் மேலும் கூறினார்.

ஐந்து வயதுக்கும் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகள் என நம்பப்படும் குழந்தைகள், ஆக்லாந்து சேமிப்புக் கிடங்கில் உள்ள சூட்கேஸ்களில் பல ஆண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.